நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 40 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

0
72

 மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது.

நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக, ஜூன் 29-ல் மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 120 அடியை எட்​டி, நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கும்​போது, நீர்​மட்​டம் உயரு​வது​மாக இருக்​கிறது.

கர்நாடக அணையில் நீர்திறப்பு: கடந்த ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25 என நடப்​பாண்​டில் ஏற்​கெனவே, 4 முறை மேட்​டூர் அணை நிரம்​பியது. இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி, மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 117.56 அடி​யாக இருந்​த​போது, பரு​வ​மழை காரண​மாக கர்​நாட​கா​வில் உள்ள அணை​கள் நிரம்​பியதும் அவற்​றில் இருந்து தமிழகத்​துக்கு விநாடிக்கு 1 லட்​சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 1.08 லட்​சம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்​டிருந்​தது. அப்​போது அணை​யின் நீர்​மட்​டம் 119.02 அடி​யாக​வும், நீர் வெளி​யேற்​றம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக​வும் இருந்​தது. இதனிடையே, அதி​கப்​படி​யான நீர்​வரத்து காரண​மாக, நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் மீண்​டும் 120 அடியை எட்​டி, நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்பி சாதனை படைத்​தது.

இதற்​கிடையே, அணைக்கு நீர்​வரத்து நேற்று மாலை விநாடிக்கு 69 ஆயிரத்து 736 கனஅடி​யாக குறைந்​தது. எனினும், அணை நிரம்பி உள்​ள​தால், இரவு 8 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை தொடர்​கிறது.

ஒகேனக்​கல் நில​வரம்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 78 ஆயிரம் கனஅடி​யாக​வும், காலை 7 மணி​யள​வில் 88 ஆயிரம் கனஅடி​யாக​வும், 8 மணி​யள​வில் 98 ஆயிரம் கனஅடி​யாக​வும், 10 மணியள​வில் 1 லட்​சத்து 15 ஆயிரம் கனஅடி​யாக​வும், இரவு 8 மணி​யள​வில் 1 லட்​சத்து 45 ஆயிரம் கனஅடி​யாக​வும் நீர்​வரத்து படிப்படி​யாக உயர்ந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 1 லட்​சத்து 5,000 கனஅடி​யாக​வும், மாலை 4 மணி நில​வரப்​படி 57 ஆயிரம் கனஅடி​யாக​வும் நீர்​வரத்து குறைந்​தது.

குளிக்க, பரிசல் இயக்க தடை: கர்​நாடக மாநில அணை​களில் இருந்து திறக்​கப்​படும் உபரி நீரின் அளவு குறைக்​கப்​பட்ட நிலை​யில் ஒகேனக்​கல் காவிரி​யிலும் நீர்​வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here