மும்பையில் தொடரும் கனமழையால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு

0
57

 மும்​பை​யில் தொடரும் கனமழை காரண​மாக அரசு அலு​வலங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்கப்பட்​டுள்​ளது. மேலும் தங்​களது ஊழியர்​களை வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு தனி​யார் நிறு​வனங்​கள் கேட்​டுக் கொண்​டுள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பை​யில் கடந்த 4 நாட்​களாக கனமழை கொட்​டித் தீர்த்து வரு​கிறது.

நேற்று பெய்த கனமழை காரண​மாக சாலைகளில் வெள்​ளம் புரண்​டோடியது. மேலும் முக்​கிய சாலை சந்​திப்​பு​களில் வெள்​ளம் சூழ்ந்து நிற்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மக்​களின் இயல்பு வாழ்க்கை முற்​றி​லும் முடங்கி உள்ளது.

மும்பை உட்பட மகா​ராஷ்டி​ரா​வின் பல்​வேறு பகு​தி​களில் அடுத்த 2 நாட்​களுக்கு கனமழை நீடிக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை செய்​துள்​ளது. கனமழை காரண​மாக மும்​பை​யில் உள்ள அனைத்து பள்​ளி​கள் மற்​றும் கல்​லூரி​களுக்கு விடுமுறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கனமழை, வெள்​ளம் காரண​மாக மும்​பை​யில் உள்ள மாநில அரசு அலு​வல​கங்​கள், தனி​யார் நிறு​வனங்​களை மூட உத்​தரவு பிறப்பிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தனி​யார் நிறு​வனங்​களைச் சேர்ந்த ஊழியர்​கள் வீட்​டிலிருந்தே பணிபுரிய வேண்​டும் என்று கேட்டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர்.

மேலும் வெளியூர் செல்ல நினைப்​பவர்​களும் தங்​களது பயணத்தை தள்​ளிவைக்​கு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர். இதுதொடர்​பான உத்​தரவு மும்பை பெரு மாநக​ராட்​சி(பிஎம்​சி) பிறப்​பித்​துள்​ளது. நேற்று காலை 8 மணி​யுடன் முடிந்த 24 மணி நேரத்​தில் மும்பை நகரம், கிழக்​கு, மேற்கு புறநகர் பகு​தி​களில் முறையே 186.43, 208.78, 238.19 மில்​லிமீட்​டர் மழை பதி​வாகி​யுள்​ளது.

மேலும், நகரின் பல்​வேறு பகு​தி​களில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்​டர் வரை காற்று வீசக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரித்​துள்​ளது. மும்​பை​யின் தாதர், மாதுங்​கா, பாரெல், சியோன் பகு​தி​களில் உள்ள ரயில்வே தண்​ட​வாளங்​களில் மழை வெள்ளம் தேங்கி நிற்​ப​தால் ரயில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. புறநகர் ரயில் சேவை​யும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. பல ரயில் நிலை​யங்​களில் இருந்து ரயில்​கள் தாமத​மாக இயக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here