பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டி தொடக்கம்

0
116

சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் ஆடவர் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

தொடக்க விழாவில் தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, எஸ்டிஏடி பொது மேலாளர் எல்.சுஜாதா, சர்வதேச வாலிபால் வீரர் பி.சுந்தரம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணை தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறுவர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டான்பாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ், செயின்ட் பீட்ஸ், சேது பாஸ்கரா, பிஏகே பழனிசாமி, ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம், ஆலந்தூர் மான்போர்ட், முகப்பேர் வேலம்மாள் ஆகிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here