கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் சூசைமரியாள் என்ற மூதாட்டியை நேற்று முன்தினம் போலீசார் தாக்கியதில் இறந்ததாகக் கூறப்பட்டது. மூதாட்டி உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மூதாட்டி சாவுக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர்.
இதனால் பரிசோதனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூசைமரியாள் தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.














