ஆந்திர மாநிலத்தில் மகளிர் இலவச பயண திட்டத்துக்கு 74 சதவீத பேருந்துகள் ஒதுக்கீடு

0
114

ஆந்​தி​ரா​வில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்​திர தினம் முதல் மாநிலம் முழு​வதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அமல்படுத்​தப் போவ​தாக அறி​வித்​துள்​ளார். தேர்​தல் வாக்​குறு​தி​யான இதனை அமல்​படுத்த தீவிர ஏற்​பாடு​கள் மாநிலம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநில அரசு பஸ் போக்​கு​வரத்து கழக (ஏபிஎஸ்​ஆர்​டிசி) நிர்​வாக இயக்​குநர் துவாரகா திரு​மல​ராவ் திருப்​பதி அடுத்​துள்ள வெங்​கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்​தார்.

அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: மகளிருக்​கான இலவச பேருந்து திட்​டத்​துக்​காக தற்​போது வரை 750 புதிய பேருந்​துகள் வாங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 600 பேருந்​துகள் வர உள்​ளன. அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் இத்​திட்​டம் அமலுக்கு வருகிறது.

மொத்​தம் உள்ள 11,000 பேருந்​துகளில் 74 சதவீத பேருந்​துகள் மகளிர் இலவச பயண திட்​டத்​துக்​காக ஒதுக்​கப்பட உள்​ளன. இத்​திட்​டம் ஒருங்​கிணைந்த மாவட்​டங்​களில் செயல்​படுத்​தப்​படும். அனைத்து பஸ் நிலை​யங்​களி​லும் குடிநீர், கழிப்​பறை, மின்​விசிறி, நாற்காலி வசதி​கள் செய்து தரப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here