குழித்துறை நகராட்சி கூட்டம் சேர்மேன் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த கூட்டத்தில் அவர் கூறுகையில்: – மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறை மூலம் தூய்மை இந்தியா திட்டம் சார்பாக அரசால் ஆய்வு செய்யப்பட்டு, தூய்மை நகருக்கான ஒரு நட்சத்திர அங்கீகாரம் குழித்துறை நகராட்சிக்கு கிடைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் தூய்மையான நகருக்கான ஒரு நட்சத்திர அங்கீகாரம் பெறும் முதல் நகராட்சி குழித்துறை நகராட்சி என கூறினார்.