கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும், நவீன வசதி உடன் புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு கொல்லங்கோடு வர்த்தக சங்கத் தலைவர் கோபன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க செயலாளர் ஹரிகுமார், துணைத்தலைவர் தாமோதரன், சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.