இனயம், 16ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (69). மீனவர். குடிப்பழக்கம் உடையவர். தற்போது அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்த அந்தோணி பிள்ளை தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டார். மகள், உறவினர்கள் உதவியுடன் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் அந்தோணி பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.