நாகர்கோவில் வடசேரி மார்பன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் வளர்மதி (21), தனி யார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மாலை அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வளர்மதியை பல இடங்களில் தேடினர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.