திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி அனிதா (53). ஸ்டீபன் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆற்றூரில் அனிதா மருந்துகடை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக மருந்துகடை திறக்கவில்லை. அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. திருவட்டார் போலீசார் மற்றும் உறவினர்கள் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது படுக்கையறையில் அனிதா பிணமாகக் கிடந்தார். அவர் இறந்து 5 நாட்கள் ஆகி நாற்றம் வீசியது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.













