நிலுவை வழக்குகளை குறைக்க மாநில சமரச தீர்வு மையம் சார்பில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி

0
133

நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு சமரச தீர்வு மையம் செயல்​படு​கிறது.

உயர் நீதி​மன்​றம் மற்​றும் கீழமை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை வீண் தாமதம், வீண் செல​வுகள் இல்​லாமல் சுமுக​மாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதன் செயல்​பாடு​கள் குறித்து மக்​கள் அறிந்​து​கொள்​ளும் வகை​யில், விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் உச்ச நீதி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் ஆகியோர் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

அதன்​படி, சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள மாநில சமரச தீர்வு மையத்​தில் தேசத்​துக்​கான சமரச விழிப்​புணர்வு பிரச்​சார பேரணி நேற்று நடத்​தப்​பட்​டது. தீர்வு மையத்​தின் இயக்​குநர் பாலசுப்​பிரமணி​யன் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

அவர் கூறும்​போது, “மாநிலம் முழு​வதும் இந்த சமரச விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் 90 நாட்​கள் நடை​பெற உள்​ளது. விவாகரத்து போன்ற திருமண பிரச்​சினை​கள், குடும்ப வன்​முறை, விபத்து இழப்​பீடு, காசோலை மோசடி போன்ற வழக்​கு​களுக்கு சமரச முறை​யில் தீர்வு காணப்​படும்.

தாலுகா மற்​றும் மாவட்ட சட்​டப் பணி​கள் மூல​மாக காணொலி முறை​யிலும் சமரச தீர்வு மைய வழக்​கு​களை விசா​ரிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​மக்​கள், வழக்​கறிஞர்​கள் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்​றார். விழிப்​புணர்வு பேரணி​யில் நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​கள்​, நீதித்​துறை பணி​யாளர்​கள்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here