குளச்சல், மேலகுறும்பனையைச் சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36) இவருக்குச் சொந்தமான பைபர் வள்ளத்தில் நேற்று டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் தூக்கிவீசப்பட்டது. இதில் வள்ளத்தில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர். இதில் டார்வின், ஜார்ஜ் இருவரும் பலத்த காயமடைந்தனர். கடலில் தத்தளித்த 6 பேரையும் மீனவர்கள் மீட்டுக் கரைசேர்த்தனர். படுகாயமடைந்த 2 பேரும் கருங்கல் மற்றும் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.














