மீண்டும். டி.வி. தொடரில் நடிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

0
128

 டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார்.

இதன்படி, தற்போது `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற பெயரில் டி.வி. தொடர் தயாராகி வருகிறது. அதில் ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here