பாக். ஆதரவு வீடியோவை பகிர்ந்தவரின் ஜாமீனை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

0
125

 உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹரைச் சேர்ந்தவர் அன்சர் அகமது சித்திக். இவர் கடந்த மே 3-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக புலந்த்சாஹர் காவல் நிலையத்தில் சித்திக் மீது பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சித்திக் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நிராகரித்தார். இதுகுறித்து நீதிபதி கூறும்போது, “தேச விரோத மனப்பான்மை கொண்டவர்களின் இத்தகைய செயல்களை நீதிமன்றங்கள் சகிப்புத்தன்மையுடன் நடத்துவதால், இதுபோன்ற குற்றங்கள் வழக்கமாகி வருகின்றன. எனவே, ஜாமீன் வழங்க முடியாது’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here