லே சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் டெல்லி திரும்பியது

0
101

தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம் (6E 2006) இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் லே நகருக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சுமார் 180 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லே நகரை அடைந்ததும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தரையிறங்க முடியாமல் விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விமானம் மீண்டும் இயக்கப்படுவதற்கு முன் அதில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பயணிகள் லே நகருக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று மற்றொரு சம்பவமாக ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்திலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் ஹைதராபாத் திரும்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here