‘எனக்கு நடிக்க தெரியாது என்றார்கள்’ – அனுபமா வருத்தம்

0
211

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாளப் படம், ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா’. ஜூன் 27-ல் வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபமா, மலையாள சினிமாவில் தன்னை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான அனுபமா, தமிழ், தெலுங்கில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை.

இதனால், மலையாள படங்களில் அதிகம் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, “மலையாள சினிமாவில் என்னை பலர் ஓரங்கட்டினார்கள். எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னார்கள். நிறைய ட்ரோல்களை சந்தித்தேன். என் மீதான விமர்சனங்களை மீறி இந்தப் படத்தின் இயக்குநர் பிரவின் நாராயணன் இதில் நாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு நன்றி.

உங்களுக்கு விருப்பம் என்றால் என்னை விமர்சித்துக் கொள்ளுங்கள். ஆனால், அதன் மூலம் என் வாழ்வை அழித்துவிடாதீர்கள். என்னை ஆதரித்தவர்களுக்கும், என்னை வெறுத்தவர்களுக்கும் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கும் நன்றி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here