அகமதாபாத் விபத்து எதிரொலி: நடுவானில் பறந்த விமானம் திடீரென சென்னை திரும்பியது

0
198

அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது.

சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது.

இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு கட்டுப்பாட்டு அறை மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானம் அகமதாபாத்துக்குச் செல்லாமல் நடுவானில் திரும்பி மீண்டும் சென்னையை வந்தடைந்தது. அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் சீரடைந்த பின்பு, சென்னை- அகமதாபாத் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது.

சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது.

இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு கட்டுப்பாட்டு அறை மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானம் அகமதாபாத்துக்குச் செல்லாமல் நடுவானில் திரும்பி மீண்டும் சென்னையை வந்தடைந்தது. அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் சீரடைந்த பின்பு, சென்னை- அகமதாபாத் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here