தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலான திட்டங்கள், நலஉதவிகள், வழங்கப்பட்ட புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், குமரி மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்தும் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.