பழங்குடியினர் ஆணைய ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை  

0
131

கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்​நாட​கா​வில் வால்​மீகி பழங்​குடி​யினர் வளர்ச்சி ஆணை​யத்​தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்​த​தாக அதன் கண்​காணிப்​பாளர் சந்​திரசேகரன் கடந்த மே மாதம் குற்​றம்​சாட்​டி​னார்.

இதற்கு உடந்​தை​யாக இல்​லாத​தால் தனக்கு நெருக்​கடி கொடுக்​கப்​பட்​ட‌​தாக குற்​றம்​சாட்​டிய அவர், தற்​கொலை செய்​து​கொண்​டார். இது தொடர்​பாக, ஆணை​யத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஜி.பத்​மநபா உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்​தனர். முன்​னாள் அமைச்​சர் நாகேந்​திரா உள்​ளிட்​டோரின் வீடு​களில் சோதனை நடத்​தினர். மேலும் நாகேந்​தி​ராவை கைது செய்​து, விசா​ரணை நடத்​தினர்.

இந்​நிலை​யில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பெல்​லாரி காங்​கிரஸ் எம்​.பி. துக்கா ராம், காங்​கிரஸ் எம்​எல்​ஏ.க்​கள் நரா பாரத் ரெட்​டி, நாகேந்​தி​ரா, ஜி.என்​.கணேஷ் ஆகியோரின் வீடு மற்​றும் அலு​வல​கங்​களில் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இந்த சோதனையில் முக்​கிய ஆவணங்​கள் சிக்​கிய​தாக கூறப்​படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here