‘குபேரா’ டீசர் எப்படி? – தனுஷின் நடிப்புக்கு மீண்டும் ஒரு தீனி!

0
251

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? – ‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளின் துணுக்குகளுடன் தொடங்கும் டீசரில், சில நொடிகளுக்குப் பிறகு வரும் தனுஷ் தொடர்பான காட்சிகளின் மூலம் அவரது நடிப்பு தீனி போடும் மற்றொரு படமாக இது இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

ராஷ்மிகா ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டிச் செல்கிறார். சீரியஸ் தன்மை பொதிந்த கதை என்றாலும் டீசரில் வன்முறை, ரத்தம் இல்லாமல் இருப்பது ஆறுதல். படத்தில் உணர்வுபூர்வமான அம்சங்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here