‘அறந்தாங்கியில் இம்முறை சூரியன் உதிக்க வேண்டும்!’ – அரசர் மகனுக்கு செக் வைக்கும் திமுக

0
186

2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எம்​ஜிஆர் காலத்து அரசி​யல்​வா​தி​யான சு.​திரு​நாவுக்​கரசர் 1977 தொடங்கி 1996 வரை தொடர்ச்​சி​யாக 6 முறை அறந்​தாங்கி தொகு​தியை வென்​றவர். அமைச்​சர், துணை சபா​நாயகர் என ஒரு ரவுண்டு வந்​தவர், ஒரு​கட்​டத்​தில் தனிக் கட்சி தொடங்​கி​யும் அறந்​தாங்​கி​யில் ஆதிக்​கம் செலுத்​தி​னார். பின்​னர், பாஜக-​வில் இணைந்து மத்​திய அமைச்​ச​ராக​வும் வலம் வந்த அரசர், பிற்​பாடு காங்​கிரஸில் இணைந்து மாநில தலை​வர் அந்​தஸ்​துக்கு தன்னை உயர்த்​திக் கொண்​டார்.

இந்த நிலை​யில், 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் தனது மகன் ராமச்​சந்​திரனை அறந்​தாங்​கி​யில் நிறுத்தி ஜெயிக்​க​வைத்​தார் அரசர். அதே​போல், 2024-ல் எப்​படி​யும் சோனி​யா, ராகுல் சிபாரிசில் திருச்சி தொகு​தியை தனக்​காக அவர் கேட்டு வாங்​கி​விடு​வார் என காங்​கிரஸ்​காரர்​கள் சொல்​லிக் கொண்​டிருந்​தார்​கள். ஆனால், அது நடக்​காமல் போனது. திரு​நாவுக்​கரசருக்கு திருச்சி மீண்​டும் கிடைத்​து​விடக் கூடாது என்​ப​தில் திருச்சி திமுக-​விலும் சிலர் கர்​வம்​கட்டி காய்​நகர்த்​தி​னார்​கள். இதை அப்​போது வெளிப்​படை​யாகவே சொன்ன அரசர், “எனக்கு மீண்​டும் திருச்சி சீட் கிடைத்​து​விடக்​கூ​டாது என்​ப​தில் கண்​ணும் கருத்​து​மாக இருந்த திமுக-​வினர் யார் யார் என்​ப​தெல்​லாம் எனக்​குத் தெரி​யும்” என்​றார்.

இந்​நிலை​யில், மக்​கள​வைத் தேர்​தலின் போது (அறந்​தாங்கி தொகு​தியை உள்​ளடக்​கிய) ராம​நாத​புரம் மக்​கள​வைத் தொகு​தி​யின் இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் வேட்​பாளர் நவாஸ் கனி அறி​முகக் கூட்​டம் அறந்​தாங்​கி​யில் நடந்​தது. அப்​போது, தொகுதி எம்​எல்​ஏ-​வான ராமச்​சந்​திரனின் படம் இல்​லாமலே ஃப்​ளெக்ஸ் வைத்​திருந்​ததை காங்​கிரஸார் சர்ச்​சை​யாக்​கி​னார்​கள். அப்​போது அங்​கிருந்த அமைச்​சர் ரகுப​தி​யிடம், “அறந்​தாங்​கியை கூட்​டணி கட்​சிக்கே ஒதுக்​கு​வ​தால் இங்கு திமுக வளர்ச்சி அடைய​வில்​லை. அதனால் அடுத்த முறை அறந்​தாங்​கி​யில் உதயசூரியன் போட்​டி​யிட வேண்​டும். அதில்​லாமல் மீண்​டும் காங்​கிரஸுக்கு ஒதுக்​கி​னால் அறி​வால​யத்தை முற்​றுகை​யிட்டு நியா​யம் கேட்​போம்” என திமுக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான உதயம் சண்​முகம் ஆவேச​மாக பேசி​னார். இதை தலை​மை​யின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தாகச் சொல்லி திமுக-​வினரை அமைச்​சர் ரகுபதி அப்​போது சமா​தானப்​படுத்​தி​னார்.

இதன்​பிறகு, எம்​எல்​ஏ-​வான ராமச்​சந்​திரன் கலந்​து​கொள்​ளும் நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொள்​வ​தில் திமுக-​வினர் ஆர்​வம் காட்​டா​மலேயே இருந்து வரு​கி​றார்​கள். இதுகுறித்து நம்​மிடம் பேசிய அறந்​தாங்கி திமுக-​வினர், “வெற்றி பெற்ற பிறகு திமுக-​வினர் யாரை​யும் ராமச்​சந்​திரன் கண்​டு​கொள்​வ​தில்​லை. அரசு நிகழ்ச்​சிகள் குறித்​தும் தகவல் தெரி​விப்​ப​தில்​லை. எப்​படி​யும் தனது தந்​தை​யார் மூல​மாக மறு​படி​யும் அறந்​தாங்கி சீட்டை வாங்​கி​விடலாம் என அவர் நினைக்​கி​றார். ஆனால், மீண்​டும் அவருக்​காக களப்​பணி செய்​யும் நிலை​யில் திமுக-​வினர் இல்​லை. திமுக லட்டு கணக்​காய் ஜெயிக்​கக் கூடிய அறந்​தாங்​கியை தொண்​டர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக காங்​கிரஸுக்கு ஒதுக்​கி​னால் ஒத்​துழை​யாமை இயக்​கம் தான் நடக்​கும்” என்​ற​னர்.

இது குறித்து காங்​கிரஸ் கட்​சி​யின் புதுக்​கோட்டை தெற்கு மாவட்​டத் தலை​வர் ராம.சுப்​பு​ரா​மிடம் கேட்​டதற்​கு, “யாருக்கு சீட் என்​பதை எல்​லாம் காங்​கிரஸ் தலைமை பார்த்​துக்​கொள்​ளும். ஆனால், ராமச்​சந்​திரனைப் பொறுத்​தவரை அறந்​தாங்கி தொகுதி வளர்ச்​சிக்​காக முதல்​வர், துணை முதல்​வரிடம் பேசி பல்​வேறு நலத்​திட்​டங்​களைக் கொண்டு வந்​திருக்​கி​றார். அதனால், அறந்​தாங்கி மக்​கள் மத்​தி​யில் அவருக்கு நல்ல மதிப்​பும் மரி​யாதை​யும் உள்​ளது. அதனால் மீண்​டும் அவருக்கே சீட் கிடைக்​கும்; அவரும் அமோக வெற்றி பெறு​வார்” என்​றார்.

இதனிடையே மே 11-ம் தேதி, ஆவுடை​யார்​கோ​வில் அருகே நடந்த திமுக சாதனை விளக்​கப் பொதுக்​கூட்​டத்​தில் பேசிய உதயம் சண்​முகம், “தேர்​தல் நெருங்​கி​விட்​டது. அதனால் சுற்​றிச் சுற்றி வரு​கிறீர்​கள். நீங்​கள் நின்​றாலும் தோல்வி அடைவீர்​கள். ஆகவே, அனை​வ​ரும் உதயசூரியன் சின்​னத்​துக்கு வாக்​களிக்க வேண்​டும். இதை தளப​தி​யிட​மும் பேச தயா​ராய் இருக்​கிறேன்” என்று அரசர் அண்ட் கோ-வை மறை​முக​மாக சாடி​னார். அறந்​தாங்கி மக்​கள் இன்​ன​மும் திரு​நாவுக்​கரசரை தங்​களின் செல்​லப்​பிள்​ளை​யாகவே நினைக்​கி​றார்​கள். அப்​படி இருக்​கை​யில், அரசர் குடும்​பத்தை ஒதுக்​கி​விட்டு திமுக-வுக்கு சீட் கொடுத்​தால் அறந்​தாங்​கி​யில் சூரியன் உதிப்​பது அத்​தனை எளி​தாகிவிடுமா என்​ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here