கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (68). இவர் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது ஊரில் 56 ஏக்கரில் நிலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சமரச குழு உருவாக்கப்பட்டு இதில் ஜான் ஜோசப் தலைவராக உள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி ஆடிட்டோரியத்தில் சமரச குழு கூட்டம் நடந்தபோது, அங்கு வந்த மோகன் குமார் என்பவர் ஜான் ஜோசப்பின் பைக் சீட்டு முழுவதும் சேற்றை தடவி வைத்துவிட்டு சென்றுள்ளார். இது சம்பந்தமாக ஜான் ஜோசப் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளுடன் மோகன் குமார் மீது புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காமல் புகாரை முடித்து வைத்ததாக தெரிகிறது. இதை அடுத்து ஜான் ஜோசப் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் நேற்று காலை ஜான் ஜோசப்பிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து கொல்லங்கோடு போலீசார் ஜான் ஜோசப் அளித்த புகாரின் பேரில் மோகன் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.