“இனி எப்போதும் பாஜக கூட்டணிதான்” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதி!

0
327

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான்” என்று தெரிவித்தார்.

1990களின் மத்தியில் இருந்த பாஜக கூட்டணியில் அங்கும் வகிந்து வந்த நிதிஷ் குமார், 2013ஆம் ஆண்டு அதிலிருந்து விலகிச் சென்றார். அதன் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி வைத்த அவர், 2017ஆம் ஆண்டு அதை உடைத்து மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியம் ஆனார்.

2022ஆம் ஆண்டு வரை இந்த கூட்டணி நீடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த அவர், கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக அங்கிருந்து வெளியேறி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here