மார்த்தாண்டம்: வாடகை வீட்டில் விபச்சாரம்; 4 பேர் கைது

0
280

மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இளம் பெண் மற்றும் நான்கு பேர் இருந்ததை கண்டனர். 

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது திற்பரப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் (47) என்பவர் வீட்டை வாடகை எடுத்து அதில் இளம் பெண்ணை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது. முருகேஷ் தக்கலை உள்ள ஒரு தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் நிலையில் விபச்சாரமும் நடத்தி வந்துள்ளார். 

இவரது வலையில் வெட்டூர்ணிமடம் பகுதி சேர்ந்த துணிக்கடையில் வேலை பார்த்த இளம் பெண்ணிடம் பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருப்பதற்காக பழவிளை பகுதி 20 வயது வாலிபர், கொல்லங்கோடு பகுதி சேர்ந்த 45 வயது நபர், காஞ்சாம்புறம் பகுதி 43 வயது நபர் என மூன்று பேர் வந்துள்ளனர். 

உடனடியாக பெண்ணை மீட்ட போலீசார் அங்கிருந்த காப்பகத்தில் சேர்த்தனர். முருகேஷ் மற்றும் உல்லாசத்துக்கு வந்த மூன்று பேரையும் பிடித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகேசை கைது செய்தனர். மற்றும் மூன்று பேரையும் விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here