மதுவுக்கு எதிராக ‘சரக்கு’ என்ற படத்தை எடுத்த மன்சூர் அலிகான், அடுத்து நடித்து இசை அமைக்கும் படத்துக்கு ‘யார் அந்த சார்?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சலாம் சினிமாஸ் சார்பில் சபூர் தயாரிக்கிறார். “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது, வேலியே பயிரை மேய்வது என்பது தான் கதைக் கரு. எதிர்பாராத திருப்பங்களுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகிறது” என்றது படக்குழு.
Latest article
“கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்…” – ‘45’ பட விழாவில் சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25...
‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட விருது விழா
தமிழ் திரைத்துறையினருக்காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜன.25 -ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்போது டூரிங் டாக்கீஸ் என்ற...
‘ஜெயிலர் 2’-வில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நோரா பதேஹி!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும்...


