இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி லண்டன் வீதிகளில் சேலையுடன் நடைப்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை இங்கிலாந்துக்கு புறப்பட்ட அவர் அங்குள்ள தொழிலபதிர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த நிலையில், அவருக்கு பிடித்தமான வெள்ளை சேலை, காலில் செருப்பு மற்றும் மேல்சட்டை அணிந்து கொண்டு லண்டன் வீதிகளில் நடைப்பயிற்சி செய்த வீடியோவை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குனால் கோஷ் என்பவர் பகிர்ந்துள்ளார். இதேபோன்று, பூங்காவில் மம்தா நடந்து செல்லும் மற்றொரு வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
முன்னதாக, இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி அளித்த தேநீர் விருந்தில் மம்தா கலந்து கொண்டார். அப்போது, முன்னெப்போதும் இல்லாத அளவில் மேற்கு வங்கம்-இங்கிலாந்து இடையோன உறவு பலம் பொருந்தியதாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.