ரம்ஜான் நோன்பு நாளை (மார்ச் 2) தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில், நாளை (மார்ச் 2) முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெள்ளிக்கிழமை மாலை ரம்ஜான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. எனவே, ஞாயி்ற்றுக்கிழமை மார்ச் 2-ம் தேதி ரம்ஜான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இஸ்லாமிய மக்கள் நாளை முதல் ரம்ஜான் நோன்பு மேற்கொள்ள உள்ளனர். சுயமரியாதை, உரிமைக்கு குரல் கொடுக்கிறோம்: இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல – கனிமொழி திட்டவட்டம்