மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக தொண்டர் ஒருவர் புகார் அளித்தார்.
இப்புகார் மீதான வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 2023 டிசம்பரில் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். 2024 பிப்ரவரியில் ராகுல் காந்திக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் புகார்தாரரிடம் பிப்ரவரி 11-ம் தேதி குறுக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது புகார்தாரரின் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
            













