அரசு பள்ளிகளுக்கான இணையதள கட்டணத்தை நேரடியாக செலுத்த பள்ளிக்கல்வி துறை முடிவு

0
258

அரசுப் பள்ளிகளுக்கான இணையச் சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக் குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத் தின் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த சேவையானது 2 திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கு (50 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.710-ம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு (100 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.900-ம் இணையச் சேவை கட்டணமாக விடுவிக்கப்படும்.

அதேபோல், இணையச் சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குநரகம் வாயிலாகவே பிஎஸ் என்எல் நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும்.

எனவே, பிஎஸ்என்எல் இணைய சேவை தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here