ஆர்எஸ்பி சென்னை அணிகள் சாம்பியன்

0
280

அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை 25-09, 25-17, 25-15 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி பெங்களூரு அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

ஆர்எஸ்பி கொல்கத்தா 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. 2-வது இடம் பிடித்த பெங்களூரு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவர் பிரிவில் ஆர்எஸ்பி சென்னை தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் அந்த அணி 25-21, 25-22, 25-15 என்ற செட் கணக்கில் டெல்லி மத்திய தலைமைச் செயலகம் அணியை தோற்கடித்தது. 3-வது இடத்தை ஆர்எஸ்பி கொச்சின் பிடித்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போலீஸ் ஐஜி வி.பாலகிருஷ்ணன். வருமான வரித்துறை ஆணையர் எஸ்.பாண்டியன், சுங்கத்துறை கூடுதல் ஆணையர் ஏ.கோவிந்தராஜ், ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்விஎம்ஏ ராஜன், வருமான வரித்துறை ஆய்வாளர் சி.ஸ்ரீகேசவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here