கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு திருத்த சட்ட மசோதா நேற்று (பிப்.13) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்பிக் கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு பொது செயலாளர் முகமது சலிம், மாவட்ட துணை தலைவர் அப்துல்சத்தார், மாவட்ட பொது செயலாளர் முஹைதீன் நாகூர் மற்றும் பலர் பங்கேற்றனர்.














