மண்டைக்காடு: கோவில் திருவிழா; எஸ்.பி நேரில் ஆய்வு

0
304

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 2-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 88-வது சமய மாநாடு பணிகளும் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மண்டைக்காடு கோவிலுக்கு சென்று அங்கு நடந்து வரும் ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார். அவர் கோயில் வளாகம், சந்திப்பு, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், ஏவிஎம் கால்வாய் சந்திப்பு, கடற்கரை, பெண்கள் பொங்கலிடும் மண்டபம், தேவசம் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். 

இந்த ஆய்வின்போது குளச்சல் ஏ எஸ் பி பிரபின் கவுதம், மனவளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மண்டைக்காடு சப் இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், ராஜசேகர், கோவில் மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here