தக்கலை: அடுத்தவர் மனைவியை அபகரித்த ஏட்டு.. புகார்

0
188

தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை பட்டினத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 16 வயதில் மகளும் 11 வயதில் மகனும் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டு, அப்போது குமரி மாவட்ட எல்லையோர காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். விசாரணையில் போலீசார் இருவரும் பிரிவதாக எழுதி வாங்கியுள்ளனர். 

அப்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்பி தனிப்பிரிவு காவலருக்கும் அந்தப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மீண்டும் கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று அந்த டிரைவர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். குடும்பத்தை சீரழிக்கும் தனிப்பிரிவு காவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். 

புகாரை விசாரித்த எஸ்பி உடனடியாக தனிப்பிரிவு ஏட்டுவை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மார்த்தாண்டம் டிஎஸ்பி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here