நித்திரவிளை அருகே நம்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (60). இவரது மனைவி அம்பிகா. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அம்பிகா உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பால்ராஜ் கடந்த 10-ம் தேதி மாலை மனைவியைக் கவனிக்க வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
நேற்று (பிப்ரவரி 12) மாலை 5 மணி அளவில் மறுபடியும் பால்ராஜ் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த ஏழு பவுன் நகை திருட்டுப் போயிருந்தது.
மேலும் ஏடிஎம் மற்றும் ஆதார் அட்டைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக பால்ராஜ் நித்திரவிளை போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.














