கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சி. சால்வன் துரை இன்று பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வாளராக சென்ற இவர் தற்போது துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மீண்டும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.














