திருவட்டார் அருகே மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவாயில் பகுதியில் காமராஜர் படம் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சசி, ஒரிரு நாட்களில் புதுப்பொலிவுடன் மீண்டும் காமராஜர் படம் பொறித்த கல்வெட்டு அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதை அடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாத்தூர் பகுதிக்கு வருகை தந்து ஏற்கனவே காமராஜர் படம் பொறித்த கல்வெட்டு அமைந்த இடத்தில் மீண்டும் அதே போன்று கல்வெட்டு அமைக்கும் பணிகளை துவங்கினர்.
கல்வெட்டு தயாராகி வருவதாகவும், புதுப்பிக்கப்பட்ட கல்வெட்டு அமைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நடந்த பணிகளை முன்னாள் எம்எல்ஏ புஷ்ப லீலா ஆல்பன் நேரில் சென்று பார்வையிட்டார்.














