குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: – தமிழக அரசாணைப்படி குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து உட்பட்ட 10 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பஸ்களான எஸ்பிசி விண்ணப்ப படிவத்தினை பரிவாகன் மூலம் ஆன்லைனில் கட்டணமாக ரூபாய் 1,600 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மேலும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். அதன்படி இரவிபுதூர் கடை மசூதி முதல் மார்த்தாண்டம் பஸ் நிலையம், கருங்கல் பஸ் நிலையம் முதல் தேவிகோடு ஏலாக்கரை, குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு முதல் தொட்டிக்குழி சந்திப்பு, புத்தன் சந்தை சிவன் கோவில் திருப்பு முதல் பளுகல் பஸ் நிலையம், பளுகல் பஸ் நிலையம் முதல் மடத்துவிளை சிஎஸ்ஐ சர்ச் வரையிலும் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிக்கலாம்.
இதேபோன்று அம்சி முதல் புதுக்கடை பஸ் நிலையம், கைசூண்டி சக்தி நகர் முதல் வில்லாரி விளை சந்திப்பு, ஆனான் விளை திருப்பு முதல் கருங்கல் பஸ் நிலையம், விழுந்தயம் பலம் முதல் மார்த்தாண்டம் பஸ் நிலையம், தேவிகோடு முதல் நெடுங்குளம் அருமனை வரையிலும் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.














