முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, உலகளவில் அதிலும் முக்கியமாக இந்தியாவில் உள்ள 32 லட்சம் கோயில்களை ஒற்றைக் கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாக்களை முறையாக ஊக்குவிக்கும் வகையில் இதுவரை செய்யாத முன்னோடி திட்டமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் மதி்பபுள்ள பொருளாதாரத்தை உள்ளடக்கிய முக்கியமான கோயில்களை ஒரே நெட்வொர்க் சங்கிலியின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது, மக்கள் எளிமையாகவும், வெளிப்படையான முறையிலும் கோயில்களை அணுகுவதை உறுதி செய்யும்.
இந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், திருப்பதியில் உள்ள ஆஷா கன்வென்ஷனில் பிப்ரவரி 17 முதல் 19 வரை நடைபெறும் கோயில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சியில் கோயில்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
அந்தியோதயா பிரதிஷ்டானுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐடிசிஎக்ஸ் 2025 மாநாடு இந்து ,சீக்கிய, பவுத்த மற்றும் ஜெயின் நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடத்தப்படுறது. அவற்றின் வளமான கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதேவேளையில் உலகளவில் கோயில்களின் செயல்பாட்டை சீரமைத்து பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் ஒரு துடிப்பான தளத்தை இந்த மாநாடு வழங்குகிறது. ஐடிசிஎக்ஸ்-ல் ஏற்கெனவே உலகளவில் உள்ள 12,0000 கோயில்கள் இணைந்துள்ளதாக அதன் தலைவர் பிரசாத் லாட் தெரிவித்துள்ளார்.
            













