தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி: சென்னையில் 19-ம் தேதி நடைபெறுகிறது

0
176

தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. சாட்ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளைக் குறைக்கவும், திறன்களை மேம்படுத்தவும் உதவும் வகையிலான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன.

சவால்களை எதிர்கொள்ள… அதன்படி வணிகத் தேவைகளுக்கான சாட்ஜிபிடி ப்ராம்ட்டுகளை எழுதுவது, சாட்ஜிபிடியை பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளை திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, வணிக செயல்திறனை துல்லியமாகக் கண்காணிக்க சாட்ஜிபிடியை உபயோகிப்பது போன்ற தொழில்முனைவோர் சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் அடங்கிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் www.editn.in என்ற இணையதளத்தையும், 9080609808 மற்றும் 9841693060 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ராம்ப்ட்டுகள், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வாட்ஸ்-அப் சமூக அணுகலைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here