கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் காலை வேலையில் ஸ்கூட்டரில் வந்து ஆங்காங்கே நின்று கொண்டு பின்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் நேற்று ஊரம்பு பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரம்பு பகுதிக்கு வந்த சந்திரன் ஸ்கூட்டரில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு குவார்ட்டர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் சந்திரனை கையும் களவுமாக பிடித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 24 குவார்ட்டர் மதுவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பின்குளம் மற்றும் சங்குருட்டி ஆகிய பகுதிகளில் சிமெண்டால் ஆன கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்திருப்பதாகவும், தினமும் காலை வேளையில் மது விற்பனையில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது. போலீசார் சந்திரனிடமிருந்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.














