திங்கள்நகர் அடுத்த கண்டன்விளை விளையாட்டு மைதானம் பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக இரணியல் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (பிப்.8) சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு நின்ற இரணியல் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (20), சர்ஜின் (19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கஞ்சாவை விற்க முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த தலா 10 கிராம் கொண்ட 5 பொட்டலங்கள் கஞ்சாவும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த குளச்சல் அடுத்த குறும்பனை பகுதி சேர்ந்த ஆஷிக் (22) மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ரதீஷ், சர்ஜின் இருவரையும் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஆஷிக்கை போலீசார் தேடி வருகின்றனர்.














