மணவாளக்குறிச்சி அருகே வயக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (65). இவர் கொத்தனார். செல்வத்துக்கு சொந்தமான பூர்விக இடம் பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் உள்ளது. நேற்று (பிப்.8) செல்வம் மற்றும் அவர் மகன் பால பிரனேஷ் ஆகியோர் இடத்துக்கு சென்று சர்வேயர் மூலம் இடத்தை அளந்து கல் போட முயன்றனர்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த ராபின் (29) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து ராபின் அவருடைய தம்பி செல்வராஜ் மற்றும் செல்வம் பாலபிரானேஷ் ஆகியோர் இரு தரப்பாக மேலும் சிலருடன் சேர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த செல்வம் பாலபிரானேஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராபின், செல்வராஜ் உள்ளிட்டோர் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து செல்வம், ராபின் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் இருதரப்பினை சேர்ந்த ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














