குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், இன்று கலெக்டர் அழகு மீனா மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்: முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் தேர்வில் தொழில் முனைவோர்களுக்கு மருந்தாளுநர்களுக்கு ரூ. 3 இலட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ. 2 இலட்சம் வழங்கப்படுகிறது.
அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவீதம் மருந்துகளுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வறிவிப்பினை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடமிருந்து 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (பிப்ரவரி 6) முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து வருகின்ற 15.02.2025 அன்று திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.














