கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ரயில்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் சென்று வருகின்றன. இங்கு வரும் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறி செல்லும் நிலை இருந்து வந்த நிலையில், எஸ்கலேட்டர் அமைக்க ரயில்வே சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு எஸ்கலேட்டர் அங்கு இருக்கும் நிலையில் தற்போது 2வது எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.














