குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதை  தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
       இந்த நிலையில் நேற்று மாலையில் அருமனை  அருகே குஞ்சாலுவிளை சந்திப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூண்டு வாகனம் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தை போலீசார் கைகாட்டி நிறுத்தினர். உடனடியாக வாகனத்தை  ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
      போலீசார் வாகனத்தை திறந்து சோதனை செய்தபோது அதில் சுமார் 2: 30 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேரளாவுக்கு கடத்தியதும் தெரிய வந்தது. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து அருமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார்?   என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
            













