கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தை சேர்ந்தவர் சக்தி, 29. டேட்டா என்டரி ஆப்ரேட்டர். இவருக்கும் இவரது கணவர் கிருஷ்ண குமாருக்கும் இடையே குடும்பப் பிரச்னை உள்ளது. இந்நிலையில் சக்தி வேலை பார்க்கும் இடத்திற்கு கிருஷ்ணகுமார் வந்து அரிவாளால் வெட்டியதாகவும், சக்தி தடுக்கவே அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கோட்டாறு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.














