திக்கணம்கோடு: போர்வெல் அமைத்தததால் நடமாட மக்கள் அவதி

0
281

திக்கணங்கோடு – முளகுமூடு சாலையில் திக்கணங்கோடு சந்திப்பில் தனியாரால் புதிதாக போர்வெல் அமைக்கப்பட்டது. போர்வெல்லில் இருந்து மண், சகதி மற்றும் கழிவுநீரை சாலை முழுவதும் கொட்டியதால் இன்று 28-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இப்பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், அவதிப்பட்டனர். 

குறிப்பாக கால் மற்றும் துணிகளில் சகதி பட்டதால் மக்கள் தொல்லையடைந்தனர். இப்பகுதியில் 7 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். எனவே சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக போர்வெல் சகதி மற்றும் கழிவுநீரை கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here