புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அபிஷ் (19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சம்பவ தினம் இவருக்கு சொந்தமான பைக்கில் இவரது நண்பர்கள் முஞ்சிறை பகுதி லிஜோ (22), பரக்கணி பகுதி விஷ்ணு (20) ஆகியோருடன் தேங்கா பட்டணம் – வெட்டுமணி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை விஷ்ணு ஓட்டினார்.
முஞ்சிறை அருகே சாத்தறை என்ற பகுதியில் பைக் அதிவேகமாக சென்றபோது நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் அபிஷ், விஷ்ணு ஆகியோர் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் லிஜோ ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் அபிஷ் அளித்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக விஷ்ணு மீது புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.














