திங்கள்சந்தை அருகே முன்னாள் மாங்குழி பங்குக்குட்பட்ட பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு அருள் வாழ்வளித்து மறைந்தவர் அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா. இவரை புனிதர் நிலைக்கு உயர்த்த ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான கூட்டம் அழகப்பபுரத்தில் நடந்தது. அருட்சகோதரி அமுதா தியோஸ் தலைமை வகித்தார்.
அன்னை ஸ்கொலாஸ்டிக்கா அவர்களின் புனிதர் பட்டத்தின் முதல் கட்டமாக இறை ஊழியர் என அறிவிக்க கோரி வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கூட்டு திருப்பலி நிறைவேற்றி வேலூர் மறைமாவட்ட ஆயருக்கு முதல் விண்ணப்பம் கொடுப்பது எனவும், அழகப்பபுரத்தில் அன்னை வாழ்ந்த வீடான சிற்றாலயத்திற்கு 24 மணி நேரமும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அருட்சகோதரி லீமா நன்றி கூறினார். அருட்சகோதரி ஜாய்ஸ், அருட்சகோதரி சாந்தசீலி உட்பட உடன் உழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.














