இரணியல்:   இளம்பெண் திடீர் மாயம்

0
295

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகள் முருகேஸ்வரி (19). சம்பவ தினம் இவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீட்டில் முருகேஸ்வரி மட்டுமே தனியாக இருந்தார். வேலைக்குச் சென்ற பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது முருகேஸ்வரியை காணவில்லை. 

இதைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரது தந்தை தேவராஜ் என்பவர் இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண் முருகேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here